search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஷாந்த் சர்மா"

    • ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன்.
    • டோனி ரெய்னா மட்டும் இடையே வரலனா அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தடுத்து நடக்கவுள்ளது. இதில் விளையாடும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்காக ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

    இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இருதரப்பு தொடரில் இஷாந்த் சர்மா மோசமான கெட்ட வார்த்தையால் தம்மை திட்டியதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இஷாந்த் சர்மா என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். குறிப்பாக ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன். இங்கே நான் உண்மையாக பேசுகிறேன். அந்தப் போட்டியை தொடர்ந்து அகமதாபாத் நகரில் அடுத்த நாள் நடைபெற இருந்த டி20 போட்டிக்காக நாங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டோம். அப்போது நான் விராட் கோலி, சோயப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் இருவருக்குமிடையே உண்மையாக என்ன நடந்தது என சிலர் கேட்டனர்.

    அப்போது அங்கிருந்த இஷாந்த் சர்மா என்னிடம் கெட்ட வார்த்தை பேசியதாக அவர்களிடம் சொன்னார். அதற்கு நீங்கள் திரும்ப வாங்கிக்கொண்ட கெட்ட வார்த்தைகளுக்கு தகுதியானவர் தான் என்று அவர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தளவுக்கு அது மோசமான தருணமாக அமைந்தது. இருப்பினும் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இடையே வந்தனர். அவர்களுக்கு யார் மீது தவறு இருந்தது என்று தெரிந்த காரணத்தால் உடனடியாக நிலைமையை சமாளித்தனர். இல்லையெனில் அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    குறிப்பாக எனக்கு 2 போட்டிகள் தடையுடன் 5 போட்டிகளுக்கான சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும். அந்தளவுக்கு அந்த தருணம் மோசமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு டெஸ்ட் போட்டியின் போது நான் த்ரோவை சரியாக அடிக்காததால் அவர் ஆத்திரமடைந்தார்.
    • ஐ.பி.எல் போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணியின் போட்டியாக இருந்தாலும் சரி, வீரர்கள் எப்போதும் அவரைச் சுற்றி இருப்பார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2007ம் ஆண்டில் அறிமுகமானவர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. அவர் 105 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 80 ஒருநாள் போட்டிகளில் 115 விக்கெட்டுகளையும், 14 டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

    இந்நிலையில், களத்தில் கேப்டன் கூலாக வலம் வரும் முன்னாள் இந்தியா கேப்டன் எம்.எஸ் டோனி மிஸ்டர் கூல் இல்லை என்றும், அவர் அடிக்கடி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மஹி பாய்க்கு பல பலங்கள் உள்ளன. ஆனால் அமைதியும், கூலாக இருப்பதும் அவற்றில் ஒன்றல்ல. அவர் களத்தில் அடிக்கடி கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அதை நான் நேரில் கேட்டிருக்கிறேன். ஐ.பி.எல் போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணியின் போட்டியாக இருந்தாலும் சரி, வீரர்கள் எப்போதும் அவரைச் சுற்றி இருப்பார்கள். மஹி பாயுடன் யாரேனும் ஒருவர் அமர்ந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். இது நமது கிராமத்தில் மரங்களைச் சுற்றி அமர்ந்து இருப்பது போன்ற உணர்வு தான்.

    அவர் கோபப்படுவது வழக்கம் அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியின் போது நான் த்ரோவை சரியாக அடிக்காததால் அவர் ஆத்திரமடைந்தார்.

    டோனியை கோபமாக நான் பார்த்ததில்லை. ஆனால் நான் பந்தை அவரிடம் வீசும் போது அது கீழே போனது. முதல் முறை வீசியபோது, நான் அவர் கோபமடைந்ததை பார்த்தேன். இரண்டாவதாக வீசிய போது அது இன்னும் அதிகமாக இருந்தது. மூன்றாவது முறையாக வீசும் போது அதைக் கையில் கொடுங்கள் என்றார். அவர் அதை திட்டும் விதமாக சொன்னார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆண்டர்சன் பவுலிங் ஸ்டைல் மற்றும் முறை ஆகியன முற்றிலும் மாறுபட்டது.
    • அவர் இங்கிலாந்தில் வித்தியாசமான சூழ்நிலையில் விளையாடினார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 விக்கெட் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார்.

    இந்நிலையில் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் மிரட்டும் ஆண்டர்சனை விட பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களிலும் ஸ்விங் செய்யும் ஜஹீர் கான் என்னைப் பொறுத்த வரை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆண்டர்சன் பவுலிங் ஸ்டைல் மற்றும் முறை ஆகியன முற்றிலும் மாறுபட்டது. அவர் இங்கிலாந்தில் வித்தியாசமான சூழ்நிலையில் விளையாடினார். ஒருவேளை இந்தியாவில் அவர் விளையாடியிருந்தால் இந்தளவுக்கு வெற்றிகரமாக இருந்திருக்க முடியாது. எனவே அவரை விட ஜாகிர் கான் சிறந்தவர்.

    மேலும் 2014 வெலிங்டன் போட்டியில் கேட்ச் விட்டதற்காக தம்முடைய குருவான ஜாகீர் கானை அனைவரும் நினைப்பது போல் திட்டவில்லை என்று தெரிவித்தார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    அன்றைய நாளில் என்னை நானே திட்டிக் கொண்டேன். மாறாக கேட்ச் விட்டதற்காக யாரையும் திட்டவில்லை. அந்த நிலையில் என்னுடைய குருவான அவரை நான் திட்டுவேனா? அப்படி நான் கனவில் கூட நினைத்ததில்லை. இருப்பினும் அந்த போட்டியில் மெக்கல்லம் பெரிய ரன்களை அடித்ததால் நான் கடுப்பானேன். ஜஹீர், ஷமி மற்றும் நான் ஃபிளாட்டான பிட்ச்சை கொண்ட அந்தப் போட்டியில் ஒவ்வொரு 4 ஓவருக்கு ஒருமுறை மாற்றி மாற்றி வீசியது விரக்தியை ஏற்படுத்தியது.

    என்று கூறினார்.

    • சூர்யகுமார் யாதவ் 'சி'யில் இருந்து 'பி' அல்லது 'ஏ ' பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது.
    • சுப்மான் கில் 'சி' இருந்து 'பி' பிரிவுக்கு வருகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 வகையாக தரம் பிரித்து ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆண்டு ஊதியம் வழங்கப்படுகிறது. இதன்படி 'ஏ பிளஸ்' பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ. 7 கோடி, 'ஏ' பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடி, 'பி' பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடி, 'சி' பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியமாக அளிக்கப்படுகிறது.

    அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் வருகிற 21-ந்தேதி நடக்கும் கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படுகிறது. இதில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய 20 ஓவர் அணியின் வருங்கால கேப்டன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சி பிரிவில் இருந்து குறைந்தது பி கிரேடுக்கு தரம் உயர்த்தப்படுகிறார்.

    முன்னாள் துணை கேப்டன் ரஹானே, மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டனர். இதனால் அவர்கள் மூவரும் ஒப்பந்தப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதே சமயம் 20 ஓவர் போட்டியின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கடந்த ஓராண்டாக அதிரடியில் வெளுத்து கட்டுகிறார். இதனால் அவர் 'சி'யில் இருந்து 'பி' அல்லது 'ஏ ' பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது. இதே போல் சுப்மான் கில் 'சி' இருந்து 'பி' பிரிவுக்கு வருகிறார். சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இஷான் கிஷன் ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    ×